Making Vet-No Food Waste

No Food Waste:

         ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் உண்ணும் உணவிற்காக பல போராட்டங்களை சந்திக்கின்றான்.இந்த போராட்டத்தில்  சில மனிதர்களிடம் உணவு அதிகமாகவும் ,  பல மனிதர்கள் உண்ண உணவு இல்லாமலும் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.இதை சரி செய்ய உலகம் முழுவதும் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன .அவற்றுள் ஒன்றுதான் NO FOOD WASTE அமைப்பு .
         NO FOOD WASTE அமைப்பானது 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வீணாகும் உணவினை பசியில் வாடும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன்  கோவையில் பத்மநாபன் ஆனந்த் (ALUMNI OF GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY-COIMBATORE)  அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது  பல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் மூலம் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள்,வறுமையில் வாடுபவர்கள் ,வீடுகள் அற்ற மக்கள் போன்றவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது.
        திருமணம் ,திருவிழா போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதிகம் மிஞ்சும் உணவினை மேற்குறிப்பிட்ட மக்களிடம் கொண்டு செல்வதே இந்த அமைப்பின் வேலையாக அமைகிறது.
  நம் வீட்டு நிகழ்ச்சிகளில் அதிகமாகும் உணவினை இந்த அமைப்பினை தொடர்பு கொண்டு ஆதரவற்ற மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு  90877 90877
என்ற எண்ணை தொடர்பு கொண்டு அனைவர்க்கும் நன்மை பயக்கும் படி செய்வோம் . 
இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய CLICK HERE

Contact Details:
No Food Waste
Block 2, Rathinam Tech Zone,
Eachanari,
Coimbatore – 641021.

Phone no:90877 90877
Email:nofoodwaste.in@gmail.com

Post a Comment

Thank you for your Lovable comment....