மகளிர் அணி


                                                          மகளிர் அணி 



     ஆயிரம்  ஆண்டுகள்  அடுப்படியிலும் ,ஆற்றங்கரையிலும்  அல்லற்பட்ட நம் பெண்கள் இன்று அகில உலகத்தையும் ஆளும் அளவிற்கு உயர்ந்துள்ளனர் என்று சொன்னால் மிகையாகாது .பெண்கள் இருக்கும் துறையை விரல் விட்டு எண்ணும் காலம் கடந்து பெண்கள் இல்லாத துறை இந்த உலகில் உள்ளதா என்ற நிலை வந்துவிட்டது.வீட்டுக்காக  மட்டுமே போர் புரிந்த அவர்கள் இன்று நம் தாய் நாட்டுக்காகவும் போர் புரிக்கின்றனர்  என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை .


நாட்டின் கண்கள் : 


"பெண்கள் நம் நாட்டின் கண்கள் "என்று  சொல்வதுண்டு .அந்த கண்கள் தான் இன்று இந்த நாட்டை காப்பாற்ற உறங்காமல் உழைத்து 
கொண்டு இருக்கிறது .கையில் ஊதுகுழல் பிடித்த கரங்கள் இன்று விமானங்களையும்,கப்பல்களையும் இயக்கும் அளவிற்கும் ,விண்ணையும் மண்ணையும் ஆளும் அளவிற்கும் உயர்ந்துள்ளதன .வெறும் குழந்தை பெரும் எந்திரமாக மட்டுமே பார்க்க பட்ட பெண்கள் இன்று பல சாதனைகளை புரிந்து இந்த சமுதாயத்தில் தலை நிமிருந்து தைரியமாக வாழ்கின்றனர் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. இருந்தும் இதே சமுதாயத்தில் தான் பெண்கள் சீரழிக்க படுகிறார்கள்.

"காலத்திற்க்கு ஏற்ற கோலம் கொள் " என்பதற்கு ஏற்ப இந்த சமுதாயம் மாறிக்கொண்டே உள்ளது நாமும் மாறி கொண்டே உள்ளோம்.யார் என்ன செய்தாலும் நமக்கென்ன என்ற எண்ணம் மட்டுமே எல்லாரிடமும் உள்ளது.ஒரு பெண் சாதித்து விட்டால் கொண்டாடும் இந்த உலகம் அவள் சிறு தவறு செய்தால் கூட அதை பெரியதாக்கி தவறானவள்,தகுதி அற்றவள் என்ற பெயரை சூட்டி அவள் வாழ்க்கையை அழித்து விடுகிறது.அவளை பெண் என்று மதிக்காமல் அவளை சொற்களாலேயே சாகடித்து விடுகிறது.மனம் என்ற ஒன்று உள்ளதால் தான் அவன் மனிதனாகிறான்.ஆனால் அந்த மனதை எவரும் திறந்து பார்ப்பதும் இல்லை ,உணர்ந்து பயன்படுத்துவதில்லை.சூழ்நிலைக்கேற்ப பலி போட்டு ஒவ்வொரு மனிதனும் பஞ்சோந்தி போல் மாறிக்கொண்டே உள்ளான்.இந்நாட்டில் சூழ்நிலை காரணங்களையே கருத்தில் கொண்டு நல்லவள் ,தவறானவள் என்ற பட்டம் கொடுக்க படுகிறது.எதுவும் தீர விசாரிக்க படுவதற்கு முன்பே தீர்ப்பு எழுத படுகிறது,அது வீடாக இருந்தாலும் சரி நடக்க இருந்தாலும் சரி. 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையை சில பெண்கள் தாண்டும் பொது பெண் இனமே வெட்கப்பட்டு தலை குனிய நேரிடுகிறது .அதே போல் ஒரு சில ஆண்கள் செய்யும் சில காரியங்கள் கூட சில பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது அல்லது அப்பெண்ணின் வாழ்வை அழித்துவிடுகிறது .

" நீதிதான் கிடைக்கும் என்ற நிலை சென்று ,கிடைப்பதுதான் நியதி" என்ற நிலை வந்துவிட்டது . செய்திகளை ,பெண்களுக்கு எதிராக திணிக்கப்படும் குற்றங்களை புலனம் மற்றும் முக நூலில் பகிர்வு செய்கின்றனரே தவிர அதற்கு நியதி கிடைத்ததா என்று கவனிப்பதில்லை.
பதிவு மற்றும் பகிர்வு செய்வதால் மட்டும் நியதி கிடைத்துவிடும் என்ற மனநிலையை உருவாக்கி விட்டனர் போலும் .

மாற்றம் ஒன்றே மாறாதது  என்பது மாறி "மறதி ஒன்றே மாறாதது" என்ற நிலை உருவாகி விட்டது.எவன் பெண்ணுக்கு எதிராக தவறு செய்தாலும் அதை பற்றி சிறிய காலத்திற்கு மட்டும் பேசுகிறோம்,வருந்துகிறோம் ,பிறகு மறந்துவிடுகிறோம் .

"பெண்ணே உன் வலிகளை நீக்க வழிகளை தேடினேன் ,வழிகள் கிடைக்கவில்லை ,மாறாக என் விழிகளில் இருந்து கசிந்தது கண்ணீர் ,உன் வலிகளை கண்டு "

  பெண்ணின் அழுகுரலை கடைசிவரை எவரும் கேப்பதில்லை ,கேட்ப ரும் அதை கண்டுகொள்வதில்லை .தனக்குள்ளே அழுது புலம்பி ,வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தல்ல படுகிறாள் .அந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் அவளை தவறான பாதைக்கு கொண்டு சென்று சீரழித்து விடுகின்றனர் .

எந்த ஒரு மனிதனும் தனக்கும் ,தன் வீட்டு பெண்ணிற்கும் நடக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையையும் கண்டு கொள்வதில்லை .தனக்கு நடந்தால் அது கஷ்டம் ,அதுவே பிறர்க்கு நடந்தால் ,அவர் செய்த பின்விளைவு என்று கூறும் சமுதாயத்தில் நம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

பெண்களிடமும் தவறு உள்ளது.எந்த ஒரு பெண்ணும் ஒரு ஆண் ,மீது வைக்கும் முழு நம்பிக்கையை அவளின் பெற்றோர் மீது வைத்திருந்தால் 
யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் இருந்திருக்கும் .நம்பிக்கை வைக்கும் ஆண்மகன் நல்லவன் ,தன் நம்பிக்கைக்கு உரியவனா என்று தீர்மானிக்க தவறிவிடுகின்றனர் .சில பெண்களின் வாழ்வில் தீர்மானிப்பதற்கு முன்பே எதிர் பாரத விளைவுகளை சந்தித்து விடுகின்றனர் .மேலும் பெண்கள் தனக்கு கொடுக்க பட்ட சுதந்திரத்தை சரியாக பயன்படுகிறாளா என்பதே கேள்வியை உள்ளது.பெண்கள் தனக்கு உண்டான வரம்புகளை மறந்து விடுகிறாள்.பெண்ணே காதலிக்கும் போது முத்தத்தை மட்டும் கொடு ,உன்னை அல்ல . 

"பெண்ணே உன் மணம் தான் உன் வலிமை ,உன் மானம் தான் உன் உடைமை "

பெண்ணை மதிப்பவனே ஆண் மகனாகிறான் .அவளை மிதிப்பவன் அல்ல .அவளின் நம்பிக்கையை எவன் ஒருவன் காப்பாற்றுகிறானோ அவளின் அமைதிக்கான அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்கின்றானோ அவனே ஆண் என்று திமிராக சொல்லி கொள்ள தகுதியானவன் .ஆண் என்பவன் பெண்ணை பாதுகாக்க படைக்க பட்டவன்.ஒரு பெண்ணிற்கு குற்றம் நிகழும் பொது , ஒரு ஆண் மகனாக தட்டி கேளுங்கள் ."கேட்டால் தான் கிடைக்கும் ,தட்டினால் தான் திறக்கும் ".

இறுதியாக, சுருக்கமாக கூறுவதானால் 

"இந்த உலகம் அழிக்கப்படுவது தீயவர்களால் அல்ல ,கை கட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் ".இனிமேலாவது விழித்து கொள்வோம் நம் வீட்டு பெண்ணிற்கு நடப்பதற்கு முன் .

Post a Comment

Thank you for your Lovable comment....